Home இலங்கை லக்சபான நீர்வீழ்ச்சிக்கு புதிய மாற்றம்

லக்சபான நீர்வீழ்ச்சிக்கு புதிய மாற்றம்

0
image

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் லக்சபான நீர்வீழ்ச்சி பகுதிக்கான சாலை அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்தல தலைமையில், நோட்டன் பகுதியில் இருந்து லக்சபான நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பிரதான வீதியை அபிவிருத்தி செய்யும் பணிகள்  நேற்று 16ஆம் திகதி காலை ஆரம்பிக்கப்பட்டன.

இந்த வீதி அபிவிருத்தி செய்யப்பட்ட பின்னர், லக்சபான நீர்வீழ்ச்சியை பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுவதோடு, அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகளும் மேலும் சீராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அம்பகமுவ பிரதேச சபையின் கீழ் அமைந்துள்ள லக்சபான நீர்வீழ்ச்சி பகுதியை எதிர்காலத்தில் மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Source: https://samugammedia.com/new-transformers-4-lakh-watt-water-pump-1789613804

NO COMMENTS

Exit mobile version