Home இலங்கை வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் – யானை தாக்கி உயிரிழப்பு!

வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் – யானை தாக்கி உயிரிழப்பு!

0
image

வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தச் சம்பவம் முல்லைத்தீவு – இத்திமடு கிராமத்தில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

முல்லைத்தீவு குமுளமுனையை சேர்ந்த சர்விதன் என்ற இளைஞரே இவ்வாறு  பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

குறித்த இளைஞர் ஒருவர் வயல் காவலுக்கு இத்திமடு கிராமத்தில் உள்ள வயல்பகுதிக்கு நேற்றையதினம் (23) இரவு  சென்றார். 

இந்த நிலையில்  இன்று அதிகாலை வயலுக்குள் புகுந்த காட்டுயானை இளைஞனை தாக்கியதில்  குறித்த இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Source: https://samugammedia.com/a-young-man-who-went-to-the-field-to-guard—was-attacked-and-killed-by-an-elephant-1782215433

NO COMMENTS

Exit mobile version