நாட்டின் பல பகுதிகளில் அறுவடைக்குப் பின் வயல்களிலுள்ள வைக்கோலுக்குத் தீ வைக்கும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், மண்ணின் நுண்ணுயிரிகள் அழிந்து மண்வளம் சீரழிவதாகவும், வனவிலங்குகளின் வாழ்விடம் பாதிக்கப்பட்டு மனித-யானை மோதல்கள் தீவிரமடைவதாகவும் சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வைக்கோலை உருளைகளாகக் கட்டி கால்நடைப் பண்ணைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்தல்; வைக்கோலை எரிக்காமல் இயற்கை உரமாக்கும் ‘ஹேப்பி சீடர்’ (Happy Seeder) போன்ற கருவிகளைப் பயன்படுத்துதல்; வறட்சிக் காலத்திற்காக வைக்கோல் சேமிப்பு மையங்களை உருவாக்குதல்.
மண்வளம் சீரழிவது குறித்து விவசாயத் திணைக்களம் தீவிர விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொள்வதுடன், புகையை ஏற்படுத்தி இடையூறு விளைவிப்போருக்கு எதிராக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை மற்றும் பொலிஸார் மூலம் சட்ட நடவடிக்கை மற்றும் அபராதம் விதித்தல். பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம மட்டத்தில் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து, கமநல சேவை மையங்கள் மூலம் மாற்று வழிகள் குறித்து விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்.
சட்டக் கெடுபிடிகள் மட்டுமின்றி, அரசாங்கத்தின் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் விவசாயிகளின் மனமாற்றம் ஆகியவை இணையும் போதே வைக்கோல் எரிப்புக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
