Home இலங்கை வல்லை வெளியில் பயங்கரம்; பூசாரிக்கு எமனாக வந்த வாகனங்கள்

வல்லை வெளியில் பயங்கரம்; பூசாரிக்கு எமனாக வந்த வாகனங்கள்

0
image

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் வல்லை வெளிப் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பூசாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் வீதியில் ஏறிய இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பூசாரியின் மோட்டார் சைக்கிளுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது பூசாரி வீதியில் வீழ்ந்த நிலையில், பின்னால் வந்த சிறிய ரக பட்டா வாகனம் அவர் மீது மோதியுள்ளது.

இதனால் பட்டா வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த பூசாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டதால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/terrifying-outside-vellai-vehicles-came-to-the-priest-as-if-possessed-1790577512

NO COMMENTS

Exit mobile version