வவுனியாவில் மகாகவி பாரதியாரின் 105ஆவது நினைவு தினம் இன்று வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையடியில், இடம்பெற்றிருந்தது.
இதன்போது அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், பாடசாலை மாணவர்கள் மற்றும் தமிழ்மணி அகளங்கனால் அவர் தொடர்பான நினைவு பேருரைகளும் ஆற்றப்பட்டிருந்தன.
மாநகர சபை ஆணையாளர் திருமதி சி.சிவரஞ்சினி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
