Home இலங்கை வவுனியாவில் விபத்து: மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய சாரதி கைது!

வவுனியாவில் விபத்து: மதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய சாரதி கைது!

0
image

வவுனியா, வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் நேற்று இரவு 8:40 மணியளவில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.

வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிள் சாரதி மதுபோதையில் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் மதுபோதையைப் பரிசோதிப்பதற்காக, பொலிஸார் அவரைக் கைவிலங்கிட்டு விபத்து நடந்த இடத்திலேயே கைது செய்தனர்.

பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/accident-in-vavuniya-motorcycle-driver-arrested-for-driving-under-the-influence-of-alcohol-1785551370

NO COMMENTS

Exit mobile version