Home இலங்கை வவுனியா கடைவீதியில் காணப்பட்ட சூட்கேஸ்!! பொலிசாரால் அகற்றல்…!

வவுனியா கடைவீதியில் காணப்பட்ட சூட்கேஸ்!! பொலிசாரால் அகற்றல்…!

0
image

வவுனியா பசார் வீதியில் உரிமைகோரப்படாத நிலையில் காணப்பட்ட மர்ம சூட்கேஸ் பொலிசாரால் அகற்றப்பட்டது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையத்திற்கு முன்பாக உரிமைகோரப்படாமல் நீண்ட நேரமாக ஒரு சூட்கேஸ் காணப்பட்டது.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் குறித்த சூட்கேசை திறந்து அதில் சோதனையினை முன்னெடுத்திருந்தனர்.

எனினும் குறித்த சூட்கேசில் ஆடைகளும்,மருத்துவ சான்றிதழ்களும் இருந்த நிலையில் பொலிசார் அதனை எடுத்துச்சென்றனர்.

Source: https://samugammedia.com/suitcase-found-on-vavuniya-shopping-street-removed-by-police-1781341926

NO COMMENTS

Exit mobile version