Home இலங்கை விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை!

விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை!

0
image

தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து தேசிய அடையாள அட்டைகளுக்கும் பதிலாக, அடுத்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையின் கீழ், இந்த ஆண்டின் அடுத்த சில மாதங்களில் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு வலுவான உந்துதலை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அதன்படி, இந்த ஆண்டுக்குள் முதலாவது டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை வழங்கும் நிலையை எட்டுவதற்கு எதிர்பார்ப்பதாகவும், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையான டிஜிட்டல் அடையாள அட்டை முறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், அதனைத் தொடர்ந்து சுமார் இரண்டு வருட காலப்பகுதிக்குள் நாட்டில் உள்ள சுமார் 17 மில்லியன் மக்களையும் தற்போதைய அடையாள அட்டை முறையிலிருந்து டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை முறைக்கு மாற்ற எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/action-to-issue-digital-national-identity-cards-soon-1787049165

NO COMMENTS

Exit mobile version