Home இலங்கை விழிப்புலன் அற்ற 40 குடும்பங்களுக்கு ரவிகரனின் ‘வாழ்வோம் வளம்பெறுவோம்’ திட்டத்தில் உதவி

விழிப்புலன் அற்ற 40 குடும்பங்களுக்கு ரவிகரனின் ‘வாழ்வோம் வளம்பெறுவோம்’ திட்டத்தில் உதவி

0
image

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் எழுபத்தி ஐந்தாவது கட்டமானது முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசசெயலர் பிரிவிற்குட்ட வள்ளிபுனம் பகுதியில் கடந்த 02.08.2026அன்று முன்னெடுக்கப்பட்டது.

இக்கட்டத்தில் தாயகத்தைச் சேர்ந்த 40 விழிப்புலன் அற்றோரின் குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டு அவர்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வாழ்வோம் வளம்பெறுவோம் என்ற பெயரிலான செயற்றிட்டமானது குறுங்கால வாழ்வுடமை ஊக்குவிப்பு நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

குறித்த செயற்றிட்டமானது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் கடந்த 17.05.2014 அன்று முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது.

அந்தவகையில் நடைபெற்று முடிந்த எழுபத்திநான்காம் கட்டத்துடன் இதுவரையில் 4,059குடும்பங்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் ரவிகரன் பானுகோபன் அவர்களால் வாழ்வோம் வளம்பெறுவோம் 75ஆம் கட்டத்திற்குரிய நிதியுதவி வழங்கப்பட்டிந்தது.

மேலும் இதன்போது விழிப்புலன் அற்றோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களின் குறைபாடுகள் தொடர்பிலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினாரால் கேட்டறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Source: https://samugammedia.com/ravikarans-let-us-live-and-prosper-scheme-provides-aid-to-40-visually-impaired-families-1786004633

NO COMMENTS

Exit mobile version