சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் தாயாரும் சகோதரியும் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வசித்து வரும் நிலையில், நாரந்தனையில் உள்ள வீட்டில் அவரது தந்தை மட்டுமே தனியாக வசித்து வந்துள்ளார். தந்தையும் வேலை நிமித்தம் வெளியே சென்றிருந்த சமயத்தில், வேறொரு இடத்தில் வசித்து வந்த இந்த இளைஞன் அவ்வப்போது வந்து செல்லும் இந்த வீட்டிற்கு வந்துள்ளார்.
இன்று அப்பகுதி வழியாக ஆடு மேய்ப்பதற்காகச் சென்ற நபர் ஒருவர், வீட்டில் இளைஞன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக ஊர்காவற்துறை பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
