Home இலங்கை வெள்ளம் மற்றும் சீற்றத்தால் 11 மாவட்டங்கள் முடக்கம்: நுவரெலியாவில் மிக மோசமான பாதிப்பு!

வெள்ளம் மற்றும் சீற்றத்தால் 11 மாவட்டங்கள் முடக்கம்: நுவரெலியாவில் மிக மோசமான பாதிப்பு!

0
image

நாட்டில் தற்போது நிலவிவரும் கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) வெளியிட்டுள்ள அண்மைய புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, இதுவரை 4,151 குடும்பங்களைச் சேர்ந்த 16,345 பேர் அனர்த்த நிலவரங்களால் நேரடிப் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இச்சீரற்ற வானிலையால் மலையகப் பகுதியான நுவரெலியா மாவட்டமே மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு மட்டும் 1,912 குடும்பங்களைச் சேர்ந்த 7,288 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இயற்கை அனர்த்தங்கள் காரணமாக 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது தவிர, கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் உயிரிழந்துள்ளதை அடுத்து, நாடு முழுவதும் அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

தொடர் மழை மற்றும் இயற்கைச் சீற்றங்கள் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள 383 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து சேத விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இதன்படி: முழுமையாகச் சேதமடைந்த வீடுகள்: 01பகுதியளவில் சேதமடைந்த வீடுகள்: 581

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அவசர நிவாரணங்களை வழங்குவதற்கும், அனர்த்த மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் உரிய அதிகாரிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Source: https://samugammedia.com/11-districts-paralyzed-by-floods-and-rough-weather-nuwara-eliya-worst-affected-1785947420

NO COMMENTS

Exit mobile version