Home இலங்கை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தார் அகில சாலிய எல்லாவல

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தார் அகில சாலிய எல்லாவல

0
image

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அகில சாலிய எல்லாவல, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் (SLFP) உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளார்.

சபரகமுவ மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான மறைந்த மொஹான் எல்லாவலவின் புதல்வரான அகில எல்லாவல, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை தொகுதி அமைப்பாளராகவும், இரத்தினபுரி மாவட்ட தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வின் போது, அக்கட்சியின் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவிடம் இருந்து இதற்கான நியமனக் கடிதங்களை அவர் பெற்றுக்கொண்டார்.

Source: https://samugammedia.com/akhil-saliya-ellaval-joined-the-sri-lanka-freedom-party-1785404575

NO COMMENTS

Exit mobile version