Home இலங்கை ஹயஸ் வாகனம் மோதியதில் சமூக செயற்பாட்டாளர் பலி – கிளிநொச்சியில் சோகம்

ஹயஸ் வாகனம் மோதியதில் சமூக செயற்பாட்டாளர் பலி – கிளிநொச்சியில் சோகம்

0
image

கிளிநொச்சி, இயக்கச்சி பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் படுகாயமடைந்த குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்று (03) பிற்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், வீதியில் நின்றுகொண்டிருந்த பெண் மீது அதே திசையில் பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த அவர் உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிளிநொச்சி பளை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சந்திரன் சசிகலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூக மட்ட அமைப்புகளில் பணியாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

Source: https://samugammedia.com/social-activist-dies-in-haynes-vehicle-crash–sadness-in-kilinochchi-1785820245

NO COMMENTS

Exit mobile version