Home இலங்கை சமூகம் இலங்கையில் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்

இலங்கையில் ஆயிரக்கணக்கான பிள்ளைகள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்

0

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 1,000க்கும் மேற்பட்ட பிள்ளைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவர்களில் 30% பேர் லுகேமியாவால் (Leukemia) பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 25% பேர் மத்திய நரம்பு மண்டல புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையின் குருதி புற்றுநோய்களுக்கான நிபுணர் வைத்தியர் புத்திக சோமவர்தன தெரிவித்துள்ளார்.

குருதி புற்றுநோய்

அத்தோடு, நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 40,000 புற்றுநோய் நோயாளிகள் பதிவாவதாகவும், அவர்களில் 4,000 பேர் குருதி தொடர்பான புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவற்றில் மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்கள் தடுக்கக்கூடியவை என்றும் வைத்திய நிபுணர் புத்திக சோமவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version