Home இலங்கை சமூகம் நிவாரணங்களை வழங்குவதற்கு 1.2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

நிவாரணங்களை வழங்குவதற்கு 1.2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

0

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1.2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக நிதி தேவைப்பட்டால் அறிவிக்குமாறு ஜனாதிபதி அநுர அறிவித்துள்ளார். 

அரச நிர்வாக மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சரின் செயலாளர் ஊடாக இந்த தகவலை ஜனாதிபதி, சகல மாவட்டச் செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.

நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி இன்றைய தினம் காலை மாவட்டச் செயலாளர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே. ஜே. பண்டார இந்த விடயத்தை ஊடகங்களிடம் அறிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version