Home இலங்கை சமூகம் இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

0

கடந்த ஏழு மாத காலத்தினுள் இலங்கைக்கு 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் கடந்த ஏழு மாத காலத்தினுள் 15 இலட்சத்தி 656 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை

இதற்கு மேலதிகமாக இந்த மாதத்தின் கடந்த 18 நாட்களுக்குள் மட்டும் ஒரு இலட்சத்தி 32 ஆயிரத்து 368 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்தியா, ரஷ்யா, பிரிட்டன், ஜேர்மன், சீனா ஆகிய நாடுகளில் இருந்தே கூடுதலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version