Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் கொடூரம் – மருமகனால் தாக்கப்பட்ட மாமனார் பலி

கிளிநொச்சியில் கொடூரம் – மருமகனால் தாக்கப்பட்ட மாமனார் பலி

0

புதிய இணைப்பு

கிளிநொச்சியில் (Kilinochchi) மருமகனால் தாக்குதலுக்குள்ளான நிலையில் மாமனார் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (24) இரவு கிளிநொச்சி – அக்கராயன் குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் அக்கராயன் குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முதலாம் இணைப்பு 

ஐந்து நபர்களை கடித்த பூனை

அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐந்து நபர்களை கடித்த பூனை ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

  

வீடொன்றில் வளர்க்கப்பட்ட குறித்த பூனை ஐந்து பேரை கடித்த பின்னர் தலைமறைவாகி இருந்துள்ளதுடன் நீண்ட தேடுதலின் பின்னர் இறந்த நிலையில் மீட்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

உடனடியாக சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த அவ்வதிகாரிகள் குறித்த பூனையை மீட்டு பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version