Home இலங்கை 10 வயது சிறுமியின் வாக்குமூலத்தால் அதிர்ச்சி; தந்தை, தாத்தாவை தேடும் பொலிஸார்

10 வயது சிறுமியின் வாக்குமூலத்தால் அதிர்ச்சி; தந்தை, தாத்தாவை தேடும் பொலிஸார்

0
image

அம்பாலாந்தோட்டை பகுதியில் 10 வயது சிறுமியிடம் அவரது தந்தை மற்றும் தாத்தா முறைகேடாக நடந்துகொண்டதாகக் கூறி, பொலிஸாரிடம் இரண்டு தனித்தனி முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த சிறுமி கடந்த 9ஆம் திகதி பாடசாலை விளையாட்டுப் போட்டிக்காக காலி பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் மிரிஸ்ஸவில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்குச் சென்றபோது, தான் எதிர்கொண்ட துயரங்கள் குறித்து பாட்டியிடமும் உறவினர் ஒருவரிடமும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியை அம்பாலாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பாட்டி, சம்பவம் தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளார்.

சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தனது தந்தையும் தாத்தாவும் பல சந்தர்ப்பங்களில் தன்னிடம் முறைகேடாக நடந்துகொண்டதாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த சம்பவங்கள் குறித்து யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என இருவரும் தன்னை அச்சுறுத்தியதாகவும் சிறுமி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேகநபர்களான தந்தையும் தாத்தாவும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை கைது செய்வதற்காக அம்பாலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை  சிறுவர்களை கைவிடுதல், உடலளவிலும் மனதளவிலும் சித்திரவதைக்கு உட்படுத்துதல் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 

மாதமொன்றிற்கு 600 முதல் 1,000 வரையிலான முறைப்பாடுகள் கிடைப்பதாக அதன் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார். 

இவ்வாறான குற்றங்களில் ஈடுபடும் பெற்றோருக்கு, தண்டனைச் சட்டக்கோவையின் படி 2 ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்றும் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் குறிப்பிட்டார்.

Source: https://samugammedia.com/shock-over-the-testimony-of-a-10-year-old-girl-police-search-for-her-father-and-grandfather-1786691573

NO COMMENTS

Exit mobile version