Home இலங்கை குற்றம் கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது

0

கிளிநொச்சி (Kilinochchi) – திருநகர் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (25) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு
அமைவாக பொலிஸாரின் உதவியுடன் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இதன்போது, கைது செய்யப்பட்ட 10 பேரும், புதையல் தோண்ட
பயன்படுத்திய ஸ்கானர் மற்றும் நீர்ப்பம்பி உள்ளிட்ட உபகரணங்களுடன் கிளிநொச்சி
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version