Home சினிமா தாய்மாமன் கதைக்களத்தில் மாஸ் காட்டும் சூரியின் மாமன் திரைப்படம்.. 10 நாட்களில் படம் செய்த வசூல்...

தாய்மாமன் கதைக்களத்தில் மாஸ் காட்டும் சூரியின் மாமன் திரைப்படம்.. 10 நாட்களில் படம் செய்த வசூல் விவரம்

0

மாமன் படம்

தமிழ் மக்கள் எப்போதுமே சொந்தத்திற்கு கட்டுப்பட்டவர்கள். இப்போது கொஞ்சம் காலம் மாறி சொந்த பந்தம் என்பதே என்னவென்று தெரியாத காலமும் மாறி வருவது உண்மை தான்.

அதற்கு ஏற்ப மெய்யழகன், சமீபத்தில் ரிலீஸ் ஆன மாமன் போன்ற படங்கள் சொந்தத்தின் அழகை காட்டி வருகிறது.

3 நாள் முடிவில் விஜய் சேதுபதியின் ஏஸ் படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா?

அப்படி கடந்த 10 நாட்களுக்கு முன் வெளியான சூரியின் மாமன் படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.

இந்த மாமன் திரைப்படம் புரொமோஷனுக்காக ஜீ தமிழ் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு சென்று போட்டியாளர் பஞ்சமி மகன்களுக்கு தாய் மாமனாக காது குத்தும் விசேஷத்தை செய்வேன் என கூறி அதை செய்தும் முடித்தார்.

பாக்ஸ் ஆபிஸ்

ஒவ்வொரு நாளும் படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்க வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது.

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் கடந்த மே 16ம் தேதி வெளியான இப்படம் மொத்தமாக 10 நாள் முடிவில் ரூ. 30 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம். 

NO COMMENTS

Exit mobile version