Home இலங்கை சமூகம் கொழும்பு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து – வெளிநாட்டவர்கள் உட்பட பலர் மருத்துவமனையில்

கொழும்பு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து – வெளிநாட்டவர்கள் உட்பட பலர் மருத்துவமனையில்

0

கொழும்பு கோட்டை மத்திய வங்கிக்கு முன்பாக அமைந்துள்ள பிரதான ஹோட்டலில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட தீ விபத்தினால் வெளிநாட்டு பிரஜைகள் மூவர் உட்பட 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் ஊழியர்களும் அடங்குவதாக கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

ஒன்பது மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலின் 7வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.

தீயணைப்பு வாகனங்கள்

தீயை கட்டுப்படுத்த கொழும்பு திணைக்களத்தினால் 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, ஹோட்டலில் சிக்கியிருந்த வெளிநாட்டவர்களை தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் மிகுந்த முயற்சியுடன் மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.

எரிவாயு கசிவு

அவர்களில் பலர் சுவாசக் கோளாறு மற்றும் புகையால் பாதிக்கப்பட்டதாகவும் ஒரு சிலர் தீக்காயங்கள் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்டதா என்பது இதுவரை தெரியவரவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version