களுத்துறையில் (Kalutara) பாணந்துறை (Panadura) கடலில் நீராடிக் கொண்டிருந்த 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
ஜெலிமீன் உடலில் பட்டதால் ஏற்பட்ட தோல் ஒவ்வாமை காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அடிப்படை வைத்தியசாலை
இந்த மீன் இனம் உடலில் பட்ட பகுதிகளில் சிவத்தல், அரிப்பு மற்றும் வலி போன்ற அறிகுறிகள் தோன்றியுள்ளதையடுத்து குறித்த குழுவினர் பாணந்துறை அடிப்படை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாணந்துறை கடலில் செல்பவர்கள் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.