எல்லை தாண்டிய கடற்தொழிலில் ஈடுபட்ட ஒரு படகையும் அதிலிருந்த 10 கடற்தொழிலாளர்களையும் கடற்படையினர்
காரைநகர் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் யாழ்ப்பாணம் கடற்தொழில் துறை அதிகாரிகளிடம் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து கடற்படையினரால் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
மேலும், கைதானவர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.