Home இலங்கை சமூகம் தித்வா புயலினால் சுனாமியை விடவும் 10 மடங்கு பொருளாதார அழிவு

தித்வா புயலினால் சுனாமியை விடவும் 10 மடங்கு பொருளாதார அழிவு

0

தித்வா புயல் காரணமாக இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுனாமியினால் ஏற்பட்ட பாதிப்பை விடவும் பத்து மடங்கு அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பொருளாதார பாதிப்பு 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பாதிப்பை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதன் மூலம் ஏற்படும் மொத்த சேதம் 2.1 ட்ரில்லியனை விடவும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட உண்மையான சேதம் குறித்து அரசாங்கம் இதுவரை இறுதியான கணக்கெடுப்பு ஒன்றை வெளியிடவில்லை.

இறுதி சேதத் தக்கசெய்தல் அறிக்கையை உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி அமைப்புகளின் ஒத்துழைப்புடன் தயார் செய்ய மேலும் இரண்டு மாதங்கள் தேவைப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், காலநிலை மாற்றத்தின் தாக்கம் நேரடியாகவே தித்வா புயல் உருவாக காரணமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

புயல் உருவான நாட்களில் இலங்கையைச் சூழ்ந்த கடல் பரப்பின் வெப்பநிலை 30 பாகை செல்‌சியஸிற்கும் அதிகமாக இருந்ததாக கடல் விஞ்ஞான நிபுணர் பேராசிரியர் சரித பட்டியாரச்ச்சி தெரிவித்துள்ளார்.

கடல் வெப்பநிலை அதிகரிப்புக்கு உலகளாவிய வெப்பமயமாதலே முக்கிய காரணம் என பேராசிரியர் சரித பட்டியாரச்ச்சியும், கலாநிதி லக்ஷ்மண் கலகெதரவும் சுட்டிக்காட்டுகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version