Home இலங்கை சமூகம் தொடருந்து பயணிகளுக்கு வெளியான மற்றுமொரு அறிவிப்பு

தொடருந்து பயணிகளுக்கு வெளியான மற்றுமொரு அறிவிப்பு

0

தொடருந்து சேவைகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளிலும், தற்போது சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் மட்டுமே தொடருந்து பருவச் சீட்டைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

தொடருந்து சேவைகள் வழக்கமாக இயங்கும் பகுதிகளில், தொடருந்து பருவச் சீட்டுகளைப் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளில் பயணிக்க முயற்சிப்பதாக பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், இந்தப் பிரச்சினையை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

தொடருந்து பாலத்தை இரட்டைப் பாதைப் பாலமாக

இதற்கிடையில், கண்டியிலிருந்து கொழும்புக்கு வரும் தொடருந்து பயணிகளுக்காக நாளை காலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொடருந்து பருவச் சீட்டைப் பயன்படுத்தி அந்த சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க முடியும் என்று அதன் தலைவர் பி.ஏ. சந்திரபாலா தெரிவித்தார்.

இதற்கிடையில், பேராதனைப் பகுதியில் மகாவலி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொடருந்து பாலத்தை இரட்டைப் பாதைப் பாலமாக அபிவிருத்தி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து துறை தெரிவித்துள்ளது.

பாலம் பழுதுபார்க்க முடியாத நிலையை அடைந்துவிட்டதால், நாளை இது குறித்து சரியான முடிவை எடுக்க முடியும் என்றும் அதன் பொது மேலாளர் ரவீந்திர பத்மபிரியா தெரிவித்தார்.  

NO COMMENTS

Exit mobile version