Home சினிமா 10 ஆண்டுகளை கடந்த தளபதி விஜய்யின் கத்தி.. வசூல் எவ்வளவு தெரியுமா

10 ஆண்டுகளை கடந்த தளபதி விஜய்யின் கத்தி.. வசூல் எவ்வளவு தெரியுமா

0

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கோட். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கத்தி

இதை தொடர்ந்து தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று கத்தி. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.

[7IJAVB ]

மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, சதீஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 2014ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த கத்தி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மேலும், விவசாயிகளின் வலியை இப்படம் பேசியது. இதனால் இன்று வரை மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. 

வசூல் 

இப்படம் வெளிவந்து இன்றுடன் 10 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த நிலையில், கத்தி படம் உலகளவில் செய்த வசூல் மட்டுமே ரூ. 125 கோடி என சொல்லப்படுகிறது. துப்பாக்கி படத்தை தொடர்ந்து ரூ. 100 கோடி வசூல் செய்த விஜய் படம் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/10-years-of-vijay-kaththi-movie-box-office-1729582416

NO COMMENTS

Exit mobile version