Home இலங்கை சமூகம் வாகன இறக்குமதி: அடுத்த ஆண்டு காத்திருக்கும் பெரும் சிக்கல்

வாகன இறக்குமதி: அடுத்த ஆண்டு காத்திருக்கும் பெரும் சிக்கல்

0

2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி வரிகள் எதிர்பார்த்ததை விட ரூ.100 பில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதி குழு நாடாளுமன்றத்தில் கூடியபோது இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், வாகன இறக்குமதி குறைவதால் அடுத்த ஆண்டு வருவாய் வளர்ச்சி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த வருட இறுதி 04 மாதங்களில் 582 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாகனம் இறக்குமதி செய்யப்படுமென எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் இறக்குமதி

இதேவேளை, நடப்பாண்டின் முதல் 10 மாதங்களில் 2,50,000 வரையான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 63,000 கோடி ரூபா வரி வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 09 மாதங்களில் மாத்திரம் வாகன இறக்குமதிக்காக 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் (36,431 கோடி அமெரிக்க டொலர்) நிதி செலவு செய்யப்பட்டுள்ளதுடன், வாகன இறக்குமதிக்காக அதிக நிதி கடந்த செப்டெம்பர் மாதமே செலவிடப்பட்டுள்ளதாக புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

வாகன இறக்குமதிக்காக கடந்த செப்டெம்பர் மாதத்திலேயே அதிக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த செப்டெம்பர் மாதம் வாகன இறக்குமதிக்காக 286 மில்லியன் அமெரிக்க டொலர் (8,682 கோடி ரூபா) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version