Home இலங்கை சமூகம் 106 நீதித்துறை அதிகாரிகள் ஒரே தடவையில் இடமாற்றம்

106 நீதித்துறை அதிகாரிகள் ஒரே தடவையில் இடமாற்றம்

0

ஒரே தடவையில் 106 நீதித்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு (Judicial Service Commission) தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த இடமாற்றத்தில் மாவட்ட நீதிபதிகள், நீதவான்கள் மற்றும் நீதிமன்ற பதிவாளர்கள் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிச் சேவை ஆணைக்குழுவின் அறிக்கை

இடமாற்றம் செய்யப்பட்ட நீதவான்களில் மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க, மஹர நீதவான் எச்.ஜி.ஜே.ஆர். பெரேரா, குருணாகல் நீதவான் என்.டி.பி. குணரத்ன, காலி நீதவான் ஐ.என்.என். குமாரகே மற்றும் பலபிட்டிய நீதவான் ஆர்.டி.ஜனக ஆகியோரும் அடங்குவதாக நீதிச் சேவை ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version