நாடளாவிய ரீதியில் நேற்று(31) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக”
என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 1076 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(1) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கைது
இதன்போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 407 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 354
பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 43 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 268 பேரும்,
போதை மாத்திரைகளுடன் 41 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 20 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி
வைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும்
கூறினார்.
