Home இலங்கை குற்றம் பருத்தித்துறை கடற்பரப்பில் 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

பருத்தித்துறை கடற்பரப்பில் 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

0

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 11 இந்திய
கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ். பருத்தித்துறை கடற்பரப்புக்குள் ஒரு படகில் அத்துமீறி நுழைந்து
கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களே நேற்று (23) மாலை கைது செய்யப்பட்டனர்.

கடற்படை முகாம்

இவ்வாறு கைதான 11 இந்திய கடற்றொழிலாளர்களும் மீன்பிடிக்கப் பயன்படுத்திய படகுடன்
காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம்
ஒப்படைக்கப்பட்டு் இன்று (24) நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/11-indian-fishermen-arrested-1724459239

NO COMMENTS

Exit mobile version