சீனாவின் (China) லியோனிங் மாகாணத்தில் உள்ள ஹுலுடாங் நகரில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், கனமழையால் 100 கோடிக்கும் அதிகமான சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மீட்புக்குழு
இந்நிலையில் கனமழையில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 14 பேர் கானாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் சீனாவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் 150-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.