Home இலங்கை சமூகம் பாம்பன் கடற்தொழிலாளர் வலையில் சிக்கிய 115 கிலோகிராம் எடை கொண்ட மீன்

பாம்பன் கடற்தொழிலாளர் வலையில் சிக்கிய 115 கிலோகிராம் எடை கொண்ட மீன்

0

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்ற பாம்பன் நாட்டுப்படகு
கடற்தொழிலாளர்களின் வலையில் 112 கிலோகிராம் எடை கொண்ட ‘மெகா சைஸ்’ மஞ்சள் வால் கேரை மீன்
இன்று (18) அதிகாலை சிக்கியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் வடக்கு மீன்பிடி
துறைமுகத்தில் இருந்து நேற்று 50 இற்கும் அதிகமான நாட்டுப்படகுகளில் நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு
மீன் பிடிக்க சென்றிருந்தனர்.

விற்பனை

இந்த நிலையில் பாம்பன் அந்தோனியார்புரம் பகுதியை சேர்ந்த கிளிண்டன் என்பவருக்கு
சொந்தமான படகில் சுமார் 3 மீட்டர் நீளம் கொண்ட 115 கிலோகிராம் எடை கொண்ட
மஞ்சள் வால் கேரை மீன் என்றழைக்கப்படும் அம்பர்ஜாக் மீன் ஒன்று சிக்கியுள்ளது.

இதேவேளை இந்த மீன் 17 ஆயிரம் இந்திய ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version