119ஆவது சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு, சிறைக்கைதிகளுக்கு திறந்த வெளியில் வருபவர்களை பார்ப்பதற்கு விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, இன்று (16.07.2024) கைதிகளின் உறவினர்களால் கொண்டுவரப்பட்ட ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும் சுகாதார பொருட்களை வழங்க முடியும்.
இன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
காலி சிறைச்சாலை
அதேவேளை, காலி சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து அச் சிறைச்சாலையின் செயற்பாடுகளை இன்று முதல் மட்டுப்படுத்த சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கடந்த 13ஆம் திகதி காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்த மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் அவர் மூளை காய்ச்சலால் உயிரிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூளைக் காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூன்று கைதிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து காலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை ஒரு வாரத்திற்கு மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
