Home இலங்கை குற்றம் வீடொன்றில் நடந்த விருந்து – பெண்கள் உட்பட 12 பேர் கைது

வீடொன்றில் நடந்த விருந்து – பெண்கள் உட்பட 12 பேர் கைது

0

காலி, பெந்தோட்டையில் வீடொன்றில் நடந்த விருந்தொன்றில் கலந்துக் கொண்ட கும்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது நேற்றைய தினம் இடம்பெற்ற மதுபான விருந்தில் கலந்து கொண்ட பெண் உட்பட 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் பயன்படுத்திய ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸார் சுற்றிவளைப்பு

இவர்கள் களுத்துறை, பெந்தோட்டை மற்றும் அளுத்கம பிரதேசங்களில் வசிப்பவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Source: https://tamilwin.com/article/12-arrested-with-women-in-galle-lanka-police-raid-1729217278

NO COMMENTS

Exit mobile version