Home உலகம் ஈரானை உலுக்கிய 12 பங்கர்பேஸ்டர் குண்டுகள் : அணு நிலையங்களின் தகர்ப்பால் கதிரியக்க அபாயம்

ஈரானை உலுக்கிய 12 பங்கர்பேஸ்டர் குண்டுகள் : அணு நிலையங்களின் தகர்ப்பால் கதிரியக்க அபாயம்

0

இஸ்ரேல் – ஈரான் மோதல் இரண்டாவது வாரத்தில் நுழைந்த கையுடன் ஈரானின் ஃபோர்டோ, இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் ஆகிய அணுசக்தி நிலையங்களைத் அமெரிக்காவின் B-2 குண்டுவீச்சு விமானங்களும் அதன் கடற்படையின் நீர்மூழ்கி கலங்களும் தாக்கியுள்ளதால் கதிரியக்க அபாயம் குறித்த பீதியும் உருவாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பின்னரும் ஈரானிய ஏவுணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளன.

B-2 விமானங்கள் பங்கர் பேஸ்டர் (Bunker buster) எனப்படும் GBU-57 பதுங்குகுழி தகர்ப்பு குண்டுகளை வீசியுள்ளன. இதில் போர்டோ நிலையத்தை மையப்படுத்தி மட்டும 12 குண்டுகள் வீசப்பட்தாகவும் நடான்ஸ் தளத்தில் 2 குண்டுகள் வீசப்பட்டதாகவும் தெரிகிறது. 

அமெரிக்காவின் மிசோரியில் உள்ள வான்படைத்த தளத்திலிருந்து புறப்பட்ட 6 B-2 குண்டுவீச்சு விமானங்கள் இந்த தாக்குதலை நடத்திவிட்டு தளம் திரும்பியுள்ளன. 

உலகைப்பொறுத்தவரை 13 600 கிலோ எடையுள்ள இந்த ரக குண்டுகள் இப்போது தான் முதன் முறையாக செயற்பாட்டு ரீதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

வான்வழி தாக்குதல் இடம்பெற்றவேளை அமெரிகக கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்கள் நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இரண்டு தளங்களை நோக்கி 30 ரொமா ஹாக் ரக ஏவுகணைகளை ஏவிதாக்குதல் நடத்தியுள்ளன. 

இந்த தாக்குதலை அடுத்து நாட்டு மக்களுக்கு மூன்றரை நிமிட குறுகிய உரையை ஆற்றிய அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் ரம்ப். 

ஈரான் சமாதானத்துக்கு வராமல் விட்டால் இன்னும் இன்றும் தாக்குதல் நடத்தும் எனவும் ஈரான் அமெரிகக இலக்குள் மீது தாக்கதலை நடத்தினால்எதிர்கால தாக்குதல்கள் மிகப்பெரியதாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

இதற்கிடையே இஸ்ரேல் அல்லது அமெரிக்காவால் தான் ஒருவேளை கொல்லப்பட்டால் தனக்கு பின்னர் ஈரானின் ஆன்மீகத் தலைவராக வரக்கூடியதாக கருதப்படும் 3 பெயரின் பெயர்களை தற்போதைய ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிகிறது.

இது தொடர்பில் முழுமையாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய “செய்திவீ்ச்சு”

https://www.youtube.com/embed/glRvLcsCvSQ

NO COMMENTS

Exit mobile version