Home இலங்கை குற்றம் கொழும்பு நீதிமன்ற ஆவண அறையில் இருந்து திருடப்பட்ட 12 கிலோ ஹெரோயின் : விடுக்கப்பட்ட உத்தரவு

கொழும்பு நீதிமன்ற ஆவண அறையில் இருந்து திருடப்பட்ட 12 கிலோ ஹெரோயின் : விடுக்கப்பட்ட உத்தரவு

0

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் ஆவண அறையில் இருந்து  12 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி போன்று நடித்து மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேகநபரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே  உத்தரவிட்டுள்ளார்.

குறித்த உத்தரவானது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளரிடம் நேற்று (28) விடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு

இந்த போதைப்பொருள் கையிருப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக தாக்கல் செய்யப்பட இருந்ததாகவும், இதற்கு முன்னர் இந்த போதைப்பொருள் கையிருப்பு இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நீபடும் களஞ்சிய அறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அறியமுடிகின்றது.

போதைப்பொருள் கையிருப்பு இருந்த நிலையில், கடந்த நாள் வழக்கு அறைக்கு வந்த நபர் ஒருவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரி என்றும், போதைப்பொருள் கையிருப்பை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் வழக்கு அறையின் பாதுகாவலரிடம் பொய்யாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு எடுத்துச் செல்வதாக பொய் கூறி போதைப்பொருள் கையிருப்பை எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கையிருப்பை மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குக் கொண்டு செல்ல நீதிமன்ற உத்தரவு இல்லை என்றும், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய போதைப்பொருள் கையிருப்பை காணாது போகவே இது குறித்து அறியக் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது  

NO COMMENTS

Exit mobile version