வவுனியாவில் 12 மாணவர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகி நெடுங்கேணி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (04 11) குறித்த மாணவர்கள் வவுனியா வடக்கு ஓலுமடு
மகா வித்தியாலத்திற்கு சென்ற நிலையில் மரத்தில் இருந்த பப்பறக்கொப்பான்
குளவிகள் களைந்து வீதியால் சென்ற மாணவர்கள் மீது தாக்கியுள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை
இதில் பாதிப்படைந்த 12 மாணவர்கள் நெடுங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
