Home இலங்கை சமூகம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பல கோடி ரூபாய் இழப்பு

அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பல கோடி ரூபாய் இழப்பு

0

கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடருந்து, சுகாதாரம்,கல்வி, மின்சாரம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு துறைகளில் இருநூறுக்கும் மேற்பட்ட பெரிய வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வேலைநிறுத்தங்களால் நாட்டுக்கு நேர்ந்த நேரடி மற்றும் மறைமுக இழப்பு பல கோடி ரூபாய்க்கு மேல் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இழப்புகள் 

குறித்த காலகட்டத்தில்,தொடருந்து, மின்சாரம், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் வேலைநிறுத்தங்கள் அதிகளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பேராதனைப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தத்தினால் இதுவரை ஏற்பட்டுள்ள இழப்புகள்  அதிகம் என்பது புள்ளிவிபரங்களின் பகுப்பாய்வு மூலம் தெரியவருவதாக பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version