இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 13 இந்திய கடற்றொழிலாளர்கள் (Indian Fisherman)கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இன்றைய தினம் (11) இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் (Jaffna) – காரைநகர் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று படகுகளும் அதிலிருந்த 13 இந்திய கடற்றொழிலாளர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலை
கைதான கடற்றொழிலாளர்களை மயிலிட்டி கடற்றொழில் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.