Home இலங்கை கல்வி வெளியாகியுள்ள சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்! பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு

வெளியாகியுள்ள சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்! பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு

0

2024/2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் ஏ சித்தி பெற்ற பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 13,392 என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சித்தி வீதம்..

பரீட்சை முடிவுகள் வெளியீடு தொடர்பாக நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஏ சித்தி பெற்ற மாணவர்கள் மொத்த பரீட்சார்த்திகளில் 4.15 வீதமாகும் எனத் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2024/2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்  பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் சித்தி அடையாத பரீட்சார்த்திகள் 2.34 வீதம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஆண்டுக்கான சாதாரண தரப்பரீட்சைக்கு மொத்தமாக 425,152 பேர் தோற்றியிருந்ததிலிருந்து, 237,026 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் பரீட்சை ஆணையர் நாயகம்மேலும் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version