Home இலங்கை சமூகம் கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தில் மூழ்கிய 14 வயது சிறுவன் மாயம்

கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தில் மூழ்கிய 14 வயது சிறுவன் மாயம்

0

கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் ஒருவர் காணாமல்போயுள்ளார்.

மேற்படி சிறுவன் அவரது சகோதரன் மற்றும் நண்பர்களுடன் இன்று (29) முற்பகல் 11.30 மணியளவில் நீராடச் சென்றபோதே நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளார்.

தேடும் பணிகள்

திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்று வரும் முறிகண்டி – வசந்தநகர் பகுதியில் வசிக்கும் செல்வரத்தினம் ருஷாந்தன் எனும் சிறுவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

இந்நிலையில், அந்தச் சிறுவனைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Source: https://tamilwin.com/article/14-year-old-boy-missing-drowned-iranimaduk-pond-1719697131

NO COMMENTS

Exit mobile version