Home இலங்கை சமூகம் தொடர்ந்தும் மூடப்படும் அபாயத்தில் பாடசாலைகள்: வெளியான அறிவிப்பு

தொடர்ந்தும் மூடப்படும் அபாயத்தில் பாடசாலைகள்: வெளியான அறிவிப்பு

0

நாளை (05) அனைத்து தொழிற்சங்கங்களையும் கொழும்புக்கு வரவழைத்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக ஆசிரியர் அதிபர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை நேரத்தின் பின்னர் பாடசாலைக்கு முன்பாக நேற்றைய தினம் (02) ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும் தமது கோரிக்கைகளுக்கு கவனம் செலுத்தப்படாவிட்டால் பாடசாலை நேரத்திலும் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சம்பள முரண்பாடு

எவ்வாறாயினும், சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு முன்பாக நேற்று பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.

தொழிற்சங்க நடவடிக்கை

மேலும் கடந்த (01) அன்று பாடசாலைகளுக்கு முன்பாக கறுப்புக்கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தொழிற்சங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பெற்றோர்கள் இந்த நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Source: https://ibctamil.com/article/school-leave-continue-teachers-strike-tommorrow-1720065716

NO COMMENTS

Exit mobile version