Home இலங்கை சமூகம் தென்னிலங்கையை உலுக்கிய மாணவி – மாணவன் மரணம்: வெளிவராமல் தொடரும் பின்புலம்

தென்னிலங்கையை உலுக்கிய மாணவி – மாணவன் மரணம்: வெளிவராமல் தொடரும் பின்புலம்

0

கொழும்பு (Colombo), கொம்பனி வீதி அல்டைர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து பாடசாலை மாணவனுடன் குதித்து உயிரை மாய்த்த மாணவி ஏற்கனவே ஒரு முறை உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், குறித்த மாணவியும் மாணவனும் உயிரை மாய்துக்கொண்டமைக்கான காரணம் என்னவென்று இதுவரை கண்டறியப்படவில்லை.

ஆனால், சம்பவத்தன்று உயிரிழந்த மாணவி படித்த பாடசாலையில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆதாரங்கள்

இதேவேளை, உயிரிழந்த இருவரும் காதல் உறவில் இருந்தமைக்கும் போதைப்பொருள் உட்கொண்டமைக்கும் ஆதாரங்கள் ஏதும் கிடைக்கபெறவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த மாணவர்கள் உயிரை மாய்துக்கொண்ட கொழும்பு, கொம்பனி வீதியில் அமைந்துள்ள அல்டைர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து ஒரு ஜோடி காலணிகள், பணப்பைகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் சிகரெட் பக்கட்டுகளை காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.

இவர்கள் குருந்துவத்தையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளனர்.

இலங்கை – பாகிஸ்தான் நாடுகளை பின்புலமாக கொண்ட குடும்பத்தை சேர்ந்த மாணவன், இந்த மாணவியுடன் ஒரே வகுப்பில் கற்றுள்ளனர்.

விசாரணை

அத்துடன், கொம்பனிவீதி அல்டைர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் உயிரிழந்த மாணவனின் தந்தைக்கு சொந்தமான ஒரு குடியிருப்பு இருந்துள்ளது.

இந்த நிலையில், குடியிருப்பின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தனது மகன், நண்பர்களுடன் வந்தால் நுழைய அனுமதிக்குமாறு ஏற்கனவே தந்தை கூறியுள்ளார், அதற்கமைய நேற்று முன்தினம் மாலை பாடசாலை முடிந்து இந்த மாணவியும் மாணவனும் முச்சக்கர வண்டியில் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தனர்.

அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் உள்ள உடற்பயிற்சி மையத்தின் தங்கும் விடுதிக்கு சென்று பாடசாலை சீருடைகளை மாற்றி வேறு உடைகளை அணிந்து கொண்டு 67வது மாடிக்கு சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து, 67வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version