களுத்துறை பகுதியில்14 வயது சிறுமி ஒருவர் துறவறத்துக்கு செல்வதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு தலைமறைவாகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பேருவளை, வளதாறை, தசகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட சிறுமி ஒருவரே இதன்போது காணாமல் போயுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இச்சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் பேருவளை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதையடுத்தே சம்பவம் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சிறுமி கடந்த (25)ஆம் திகதி மாலை 4.00 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியதாக அவரது தாய் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பேருவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://ibctamil.com/article/14-year-old-girl-left-home-after-writing-a-letter-1714247791
