Home இலங்கை சமூகம் யாழில் கம்பத்தில் கட்டி வைத்து சிறுமி மீது கொடூர தாக்குதல் – சிக்கிய சந்தேகநபர்

யாழில் கம்பத்தில் கட்டி வைத்து சிறுமி மீது கொடூர தாக்குதல் – சிக்கிய சந்தேகநபர்

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) சிறுமி ஒருவர் மின் கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயத்தை மருதங்கேணி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் சிறுமி ஒருவர் மின் கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுமியை கட்டி வைத்துத் தாக்குதல்

குறித்த பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) மாலை அயலில் உள்ள வர்த்தக நிலையத்திற்குப் பொருட்கள் வாங்கச் சென்றபோது அங்குள்ள இனிப்பு வகையைக் களவாடியதாகக் கூறி அதன் உரிமையாளர் அந்த சிறுமியை மின் கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் காரணமாகக் காயமடைந்த சிறுமி அன்றிரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் (Base Hospital, Point Pedro) சிகிச்சைகளுக்கான அனுமதிக்கப்பட்டார்.

சிறுமியிடம் வாக்கு மூலம்

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணிப் காவல்துறையினர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்து சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மருதங்கேணி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

https://www.youtube.com/embed/w9PDDE62YEw

NO COMMENTS

Exit mobile version