Home உலகம் காசாவை சுற்றி வளைக்கும் இஸ்ரேல்: தொடரும் போர் பதற்றம்

காசாவை சுற்றி வளைக்கும் இஸ்ரேல்: தொடரும் போர் பதற்றம்

0

ஹமாஸ் (Hamas) அமைப்பினரை ஒழிப்பதற்காக காசாவை (Gaza) சுற்றி வளைத்து தாக்கி வரும் இஸ்ரேல் (Israel) கடந்த 24 மணி நேரத்தில் குடியிருப்பு பகுதியில் நடந்திய தாக்குதலில் 141 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலில் மேலும் 400 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சகம்

இந்நிலையில் காசா பகுதியில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 38,584 ஆக உயர்ந்துள்ளதாகவும், 88,800 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் காசா போர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் நீடித்து வருவதோடு, ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதற்காக காசாவிலுள்ள பொதுமக்கள் குடியிருப்புகளின் மீதும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/141-people-died-in-the-attack-in-israel-1721074186

NO COMMENTS

Exit mobile version