Home இலங்கை குற்றம் மூதூரில் வெட்டிக் கொல்லப்பட்ட இரு பெண்கள்: 15 வயது சிறுமி கைது

மூதூரில் வெட்டிக் கொல்லப்பட்ட இரு பெண்கள்: 15 வயது சிறுமி கைது

0

மூதூர், தாஹா நகரில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இரு பெண்களின் கொலை வழக்கில் 15 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சிறுமி தாஹா நகரில் உள்ள தனது இரண்டு, வயதான பாட்டிகளை அவர்களது வீட்டில் கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 

பெண்களின் பேத்தி 

68 மற்றும் 74 வயதுடைய இரு வயதான பெண்களும் இன்று அதிகாலை வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக பொலிஸாரால் மீடகப்பட்டனர். 

அதற்கு பின்னர், மூதூர் நீதவான் நீதிமன்றில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தொடர்ந்து, பொலிஸாரின் விசாரணையின் போது, இறந்த பெண்களின் பேத்தி என்று கூறப்படும் பதின்ம வயது பெண் ஒருவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version