Home இலங்கை பொருளாதாரம் அதிகரிக்கவுள்ள முட்டை விலை : வெளியான அறிவிப்பு

அதிகரிக்கவுள்ள முட்டை விலை : வெளியான அறிவிப்பு

0

நாட்டில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் முட்டைகளுக்கு 15 வீதமான பெறுமதி சேர் வரி (VAT) அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.டி.ஆர். அழககோன் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக அடுத்த வருடம் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுகர்வோர் அதிகார சபை

அத்துடன் நுகர்வோர் அதிகார சபையானது (Consumer Affairs Authority) முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்துள்ளது.

இருந்த போதும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் முட்டைகளை விற்பனை செய்ய முடியாது என முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version