Home இலங்கை குற்றம் யாழில் சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்த முயன்ற 15 வயது சிறுவன் கைது!

யாழில் சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்த முயன்ற 15 வயது சிறுவன் கைது!

0

யாழ்ப்பாணம் (Jaffna) – உரும்பிராய் பகுதியில் 10 வயது
சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்த முயன்ற சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றுமுன்தினம் (9) கோப்பாய் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 15 வயது மதிக்கத்தக்க சிறுவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்திய பரிசோதனை

இந்தநிலையில் , பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/15-year-boy-arrested-trying-molest-girl-in-jaffna-1739260415

NO COMMENTS

Exit mobile version