Home உலகம் வெளிநாடொன்றின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை!

வெளிநாடொன்றின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை!

0

பெருவின் (Peru) முன்னாள் ஜனாதிபதி ஒல்லாண்டா ஹுமாலா (Ollanta Humala) பணமோசடி வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2006 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தேர்தல் பிரசாரங்களுக்காக பிரேசிலிய நிறுவனமான ஓடெபிரெக்டிடமிருந்து சட்டவிரோத நிதியைப் பெற்றதாக லிமாவில் உள்ள நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

15 ஆண்டுகள் சிறைத்தண்டனை 

தேசியவாதக் கட்சியின் இணை நிறுவனரான அவரது மனைவி நாடின் ஹெரேடியாவும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அதே தண்டனையைப் பெற்றார். 

ஹுமாலாவுடன் இணைந்து தேசியவாதக் கட்சியை நிறுவிய அவரது மனைவி நாடின் ஹெரேடியாவும் பணமோசடி குற்றச்சாட்டில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹுமாலாவுக்கு 20 ஆண்டுகளும், ஹெரேடியாவுக்கு 26 ஆண்டுகளும் சிறைத்தண்டனை கோரி வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னாள் இராணுவ அதிகாரியான ஹுமாலா, தோல்வியுற்ற இராணுவக் கிளர்ச்சியை வழிநடத்திய பிறகு 2000 ஆம் ஆண்டில் முக்கியத்துவம் பெற்றார். 2006 ஆம் ஆண்டில், அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version